Tuesday, June 12, 2018

வெண்புள்ளி பாதித்தவர்

வெண்புள்ளி பாதித்தவர்களை பரிகாசமாகவும், பரிதாபமாகவும் பார்க்கும் மனநிலை இன்னும் பலருக்கு உள்ளது. உண்மையில் வெண்புள்ளி பாதிப்பென்பது நோயே அல்ல.

உடலில் ஏற்படும் நிறமி இழப்பின் விளைவு. அவ்வளவுதான். கை குலுக்குவதாலோ, நெருங்கிப் பேசுவதாலோ இது பரவாது

இதுகுறித்து அறிந்துகொள்ள நம் உடலியல் செயல்பாடுகள் குறித்து கொஞ்சம் அறிந்துகொள்ள வேண்டும்

நம் உடலில் கிருமிகள், பாக்டீரியாக்கள் நுழையும்போது, ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் கேடயமாக இருந்து அவற்றை எதிர்த்து அழிக்கும். சில நேரங்களில்நம் உடலில் உள்ள ஒரு உறுப்பு அல்லது சுரப்பியை எதிரியாக நினைத்து, இந்த வெள்ளையணுக்கள் அழிக்கத் தொடங்கிவிடும். அப்படி, நமது சருமத்துக்கு நிறத்தை அளிக்கும்  'மெலனோசைட்’  என்ற சுரப்பியை வெள்ளையணுக்கள் அழிப்பதால்தான் உடலில் வெள்ளைப் புள்ளிகள் ஏற்படுகின்றன

இந்தப் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

இது தொற்றுநோய் அல்ல, பரம்பரை வியாதியும் அல்ல என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது

வெண்புள்ளி பாதிப்புள்ளவர்கள், அதுகுறித்த அறிவியல் உண்மைகளைத் தெரிந்துகொண்ட பிறகு அவர்களின் உணர்விலும், நடத்தையிலும் மிகப் பெரிய மாற்றத்தைக் காணமுடியும். உண்மை அறியாதவரையில், பதற்றம்வெறுப்பு, அவநம்பிக்கை, மனச்சோர்வு, பயம் என மிகப்பெரும் மன அழுத்தத்துடனே வாழ்வார்கள். புள்ளிகளால் எந்த ஆபத்தும் இல்லை என்பதை முதலில் நாம் உணர வேண்டும்